சகோதரியைப் பட்டினி போட்டு, அடித்துக் கொன்ற ஆடவருக்கு ஆயுள்தண்டனை
(கோப்புப் படம்: Jeremy Long)
This audio is generated by an AI tool.
இளைய சகோதரி உயிரிழக்கும் வரை துன்புறுத்திய ஆடவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹுவாங் போக்கான் (Huang Bocan), தனது காதலி, இன்னோர் ஆடவர் ஆகிய இருவருடன் சேர்ந்து 19 வயது ஹுவாங் பாவ்யிங்கைத் (Huang Baoying) துன்புறுத்தினார்.
35 வயதுச் சிங்கப்பூரரான ஹுவாங் சகோதரிக்கு மரணத்தை விளைவித்தார் என்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பாவ்யிங் துன்புறுத்தலால் உடல் எடையில் 43 விழுக்காட்டை இழந்தார். அவரது எடை 27.6 கிலோகிராமாக இருந்தது.
2021ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி அவர் துன்புறுத்தலாலும் கடும் பட்டினியாலும் உயிரிழந்தார்.
அவர் நீண்டநேரம் கழிவறையில் சங்கிலியால் கட்டப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்.
அவர் மரணத்தை விளைவித்ததாக லிம் பெங் தியொங் (Lim Peng Tiong), சீ மெய் வான் (Chee Mei Wan) ஆகிய இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
சென்ற மே மாதம் லிம்மிற்கு 14 ஆண்டு, 11 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சீயின் வழக்கு இன்னமும் தொடர்கிறது.