திருக்கை மீனைத் திருடிய ஆடவருக்குச் சிறை

Google Maps
சிங்கப்பூரில் மீன் பண்ணையிலிருந்து திருக்கை மீனைத் திருடிய ஆடவருக்கு 8 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் திருடிய அந்த albino diamond திருக்கையின் மதிப்பு 1,380 வெள்ளி.
லீ டி யூவென் (Lee De Yuan) என்ற ஆடவர் ஜனவரி 21ஆம் தேதி ஒருவருடன் சேர்ந்து ஜாலான் லேக்கார் பகுதியில் இருக்கும் Qian Hui மீன் பண்ணைக்குச் சென்றார்.
தொட்டிகளில் இருந்த திருக்கைகள் மீது ஆர்வம் கொண்ட லீ யாரும் பார்க்காதபோது வலையை வைத்து ஒரு மீனைப் பிடித்தார்.
அவர் திருக்கை மீனைத் தம்முடைய பையில் வைத்துக் கொண்டு பண்ணையிலிருந்து வெளியேறினார்.
இரண்டு நாளுக்குப் பின் திருக்கை காணாமல் போனதைக் கவனித்த பண்ணை உரிமையாளர், காவல்துறையிடம் புகார் அளித்தார்.
லீ திருடியது பண்ணையின் கண்காணிப்புக் கேமராவில் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
ஒருநாள் திருடியவர் ஒரே நாளில் பிடிபட்டார்.
அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.