Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

டோபி காட்டில் ஆபாசக் காணொளி எடுத்த சந்தேக நபரை மடக்கிய பொதுமக்கள்

வாசிப்புநேரம் -

டோபி காட் (Dhoby Ghaut) ரயில் நிலையத்தில் ஆபாசக் காணொளி எடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரைப் பொதுமக்கள் மடக்கியுள்ளனர்.

30 வயது ஆடவர் மீது விசாரணை நடத்தப்படுவதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளியில் ஆடவர் ஒருவர் மின்படிகளில் ஓடுவதைக் காணமுடிகிறது.

அவரைத் துரத்தும் இன்னொருவர் பொதுமக்களிடம் உதவி கேட்கிறார்.

"அவரை நிறுத்துங்கள். பெண்ணைக் காணொளி எடுக்கிறார்!" என்று அவர் கத்துகிறார்.

சந்தேக நபரைப் பின்னர் பொதுமக்கள் சிலர் மடக்கிப் பிடித்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற SBS Transit ஊழியர்கள் காவல்துறையினரிடம் தகவல் அளித்தனர்.

நேற்று முன்தினம் (15 மே) இரவு சுமார் 10 மணியளவில் உதவிகோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறையினர் 8World ஊடகத்திடம் கூறினர்.

சந்தேக நபருக்கு லேசான காயங்கள் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : Others/8World

மேலும் செய்திகள் கட்டுரைகள்