Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"தவறானவனுடன் விளையாடிவிட்டாய்!" - முன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை வெளியிடுவதாக மிரட்டிய இளைஞருக்குக் கட்டாயச் சிகிச்சை

வாசிப்புநேரம் -

முன்னாள் காதலியை மிரட்டியதன் தொடர்பில் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் ஒருவருக்கு 12 மாதக் கட்டாய மனநலச் சிகிச்சை விதிக்கப்பட்டுள்ளது. 

அந்த 22 வயது இளைஞருடனான உறவை முடித்துக்கொள்ளும்போது அந்தப் பெண்ணின் ஆபாசப் படங்களை வெளியிடப்போவதாய் அவர் மிரட்டியிருந்தார். 

அந்தப் பெண் "தவறானவனுடன் விளையாடியிருக்கிறார்" என்றும் அவரின் படங்களைப் பகிர்வதன் மூலம் அவர் பிரபலமாவார் என்றும் அந்த இளைஞர் மிரட்டினார். 

இளைஞர் அந்தப் பெண்ணுடன் 2018ஆம் ஆண்டு உறவைத் தொடங்கினார். 

அந்த இளைஞர், பாதிக்கப்பட்ட பெண்ணின் 100க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களை வைத்திருந்தார்.

அவர்கள் இருவரும் 2019ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் Telegram தளத்தில் சண்டைபோட்டுப் பிரிந்தனர். 

அதையடுத்து, இளைஞர் ஆபாசப் படங்களை அகற்றிவிட்டார் என்று பாதிக்கப்பட்ட பெண் நம்பினார். 

ஆனால், தம்மிடம் அந்தப் படங்கள் இன்னும் இருப்பதாகவும் அவற்றைப் பலரிடம் பகிரப்போவதாகவும் அந்த இளைஞர் பலமுறை மிரட்டினார்.

அதுகுறித்து அந்தப் பெண் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் காவல்துறைக்குப் புகார் அளித்தார்.

அந்த இளைஞருக்கு மனநலப் பிரச்சினை இருந்ததாகப் பரிசோதனை மூலம் தெரியவந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்