கவனக்குறைவால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் மரணத்திற்குக் காரணமான ஆடவருக்கு 22 வாரச் சிறை
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: CNA/Wallace Woon)
புக்கிட் தீமா விரைவுச்சாலையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமான ஆடவருக்கு 22 வாரச் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
42 வயது ஆங் யீசியான் (Ang Yixian) சிறைத்தண்டனை முடிந்த பின்னர் 8 ஆண்டுகளுக்கு வாகனமோட்டத் தடையும் விதிக்கப்பட்டது.
சம்பவம் கடந்த ஆண்டு (2024) நவம்பர் 6ஆம் தேதி காலை 9.45 மணியளவில் நடந்தது.
ஆங், புக்கிட் தீமா விரைவுச்சாலையின் மூன்றாம் தடத்தில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு வலது புறத்தில் இரண்டாம் தடத்தில் 24 வயது ஆடவர் மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அதைக் கவனிக்காமல் ஆங், சமிக்ஞை கொடுக்காமல், இரண்டாம் தடத்திற்கு வாகனத்தைத் திருப்பியபோது மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதுவதற்கு முன் வாகனத்தை நிறுத்தி மருத்துவ வாகனத்தை அழைத்தார்.
மருத்துவமனையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு அவசர மூளை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவர் நவம்பர் 9ஆம் தேதி (2024) இரவு மாண்டார்.
கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் குற்றத்திற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுச் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA