Suntec City Fountain of Wealthஇல் மோதிய கார் - ஓட்டுநருக்கு 5 வாரச் சிறை
வாசிப்புநேரம் -
படம்: Singapore Taxi Driver Facebook group/Seah Kok Yong Francis
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சன்டெக் சிட்டியின் (Suntec City) ஃபவுண்ட்டன் ஆஃப் வெல்த்தில் (Fountain of Wealth) காரை மோதிய ஆடவருக்கு 5 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு காரை ஓட்டிய 58 வயது தென் ஷிங் சொங் (Then Shing Chong) இரண்டரை ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டது.
அவர் கவனக்குறைவாக வாகனமோட்டிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
சம்பவம் 2024ஆம் ஆண்டு ஜுலை 12ஆம் தேதி நடந்தது.
நண்பர்களைச் சந்தித்துவிட்டு மதுபோதையில் தென், நள்ளிரவு 12 மணியளவில் தமது காரை ஓட்டிச் சென்றார்.
கவனக்குறைவால் அவர் ஃபவுண்ட்டன் ஆஃப் வெல்த் மீது மோதியதில் கார் நீரூற்றின் அடித்தளத்தில் விழுந்து நொறுங்கியது.
விபத்து நடந்தபோது தென் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால் அதைக்காட்டிலும் மது அருந்தியதால் அவர் நிலைதவறியது முக்கியமாகக் கருத்தில்கொள்ளப்படவேண்டும் என்று நீதிபதி கூறினார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்துக்கு அதிகபட்சம் 12 மாதச் சிறை, $5,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆதாரம் : CNA