Skip to main content
வாய்க்குள் வைரத்தை வைத்துத் திருடிய ஆடவருக்குச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வாய்க்குள் வைரத்தை வைத்துத் திருடிய ஆடவருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
வாய்க்குள் வைரத்தை வைத்துத் திருடிய ஆடவருக்குச் சிறை

படம்: Singapore Police Force

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சைனாடவுனில் (Chinatown) வைரத்தை வாயில் மறைத்துவைத்துத் திருடிய ஆடவருக்கு 26 மாதம், 2 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 30 வயது சராசியா மிலான் ராம்னிக்பாய் (Serasiya Milan Ramnikbhai) திருடியதை ஒப்புக்கொண்டார்.

அவருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்ட 41 வயது மங்க்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாவுக்கும் ஜூலையில் அதே தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவின் சூரத் நகரில் போலி வைரத்தை இருவரும் வாங்கினர்.

ஜூன் 19ஆம் தேதி அவர்கள் சிங்கப்பூருக்கு வந்தனர்.

சைனாடவுனில் உள்ள Dianoche Diamonds Jewelry கடையிலிருந்த உண்மையான வைரத்தைத் திருட அவர்கள் திட்டமிட்டனர்.

அதன் மதிப்பு சுமார் 200,000 வெள்ளி.

கடையில் சராசியா தனது வாயினுள் வைத்திருந்த போலி வைரத்தை வெளியே எடுத்தார்.

உண்மையான வைரத்தைத் தனது வாய்க்குள் போட்டு மறைத்து வைத்தார்.

அது கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.

பின்னர் இருவரும் கடையிலிருந்து வெளியேறினர்.

அன்று மாலை இந்தியாவுக்குத் திரும்ப முற்பட்டனர்.

வைரக்கடையின் நிர்வாகி அது போலி வைரம் என்று கண்டுபிடித்துவிட்டார்.

ஆடவர்கள் இருவரும் சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

உண்மையான வைரம் மீட்கப்பட்டது.

திருடிய குற்றத்திற்கு 7 ஆண்டுவரை சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்