பணிப்பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த ஆடவருக்குச் சிறை
CNA/Ili Mansor
This audio is generated by an AI tool.
பாத்தாமில் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட சிங்கப்பூரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் 61 வயது லோ கொக் பெங் (Low Kok Peng).
மனைவி இருக்கும்போதே அவர் கொமாரியா (Komariah) எனும் இந்தோனேசியப் பெண்ணை மணம் முடித்தார்.
என்ன நடந்தது?
கொமாரியா வேலை அனுமதி பெற்று சிங்கப்பூரில் பணிப்பெண்ணாக வேலை செய்தார்.
2016ஆம் ஆண்டு அவர் லோவுக்கு அறிமுகமானார்.
எட்டு ஆண்டுக்குப் பிறகு இருவரும் பாத்தாமில் திருமணம் செய்துகொண்டனர்.
வேலை அனுமதி விதிமுறைப்படி கொமாரியா திருமணத்திற்கு முன்பு அனுமதி பெறவேண்டும்.
ஆனால் அவர் அதைச் செய்யத் தவறினார்.
இரண்டாவது திருமணம் செய்துகொண்ட லோ அதை முதல் மனைவிக்குத் தெரிவிக்காமல் அவருடனேயே இணைந்து வாழ்ந்தார்.
விவகாரம் குறித்து மனிதவள அமைச்சுக்குத் தகவல் கிடைத்தது.
அதன்படி காவல்துறை அதிகாரிகள் லோவையும் கொமாரியாவையும் கைது செய்தனர்.
லோ ஏற்கனவே திருமணமானவர் என்று தமக்குத் தெரியாது என்று கொமாரியா தெரிவித்தார்.
லோ ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.