Air Freshner ரகசிய கேமரா - ஆபாசக் காணொளி எடுத்த ஆடவருக்கு 28 வாரச் சிறை
படங்கள்:CNA/Ili Mansor, court documents
சிங்கப்பூரில் பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்து ஆபாசக் காணொளி எடுத்த ஆடவருக்கு 28 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
35 வயது இஸ்கண்டார் கமாருதீன் (Iskandar Kamaruddin)தமது வேலையிடத்தில் ஆபாசக் காணொளி எடுத்தார்.
அவர் துப்புரவாளரிடம் கழிப்பறையைப் பழுதுபார்க்கப் போவதாகக் கூறி,கழிப்பறைக்குள் சென்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இஸ்கண்டார் Air Freshner எனும் சாதனம் போன்று தோற்றமளித்த ரகசிய கேமராவை வைத்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதிக்கும் 22ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 5 பெண்களின் காணொளியை எடுத்தார்.
கழிப்பறையில் உண்மையில் Air Freshner இல்லை; ரகசிய கேமரா இருப்பதைத் துப்புரவாளர் அறிந்தார்.
இஸ்கண்டார் அப்போது காணொளிப் பதிவாகும் Memory Card அட்டையை வீட்டில் மறைத்து வைத்தார்.
அவர் அக்டோபர் 30 ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
காவல்துறையின் சோதனையில் Memory Card அட்டை கண்டுபிடிக்கப்பட்டது.