Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

MRT ரயில் கதவைக் கையால் அமுக்கி நகர விடாமல் தடுத்த ஆடவருக்கு எதிராகப் புகார்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் ஆடவர் ஒருவர் MRT ரயில் திரைக்கதவை வேண்டுமென்றே கையை விட்டுத் தடுத்து நிறுத்தியது குறித்துக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காணொளி கடந்த ஒரு வாரமாக பல்வேறு சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

சம்பவம் ஜூரோங் ஈஸ்ட் (Jurong East) ரயில் நிலையத்தில் நடந்தது எனத் தெரிகிறது.

ஒருபுற ரயிலில் இருந்து இறங்கிய ஆடவர் மறுபுறத்தில் உள்ள நடைமேடைக்கு ஓடிச் சென்று, நகரத் தொடங்கிய ரயில் திரைக்கதவில் வேண்டுமென்றே கையை விட்டுத் தடுப்பது காணொளியில் பதிவாகியுள்ளது.

அதனால் ரயில் நகராமல் நின்றது. அதன் அனைத்துக் கதவுகளும் திறந்தன. ஆடவரும் நடைமேடையில் இருந்த மற்ற பயணிகளும் ரயிலுக்குள் ஏறினர்.

அந்த ஆடவர் பெருமையுடன் காணொளிப் பதிவை TikTok சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

நகரும் ரயிலுக்குள் எப்படி நுழைவது என்ற உத்தியைக் காட்டும் காணொளி என்று அதை பதிவிட்டார்.

“life hacks” என்ற தலைப்புடன் அது தொடர்ந்துப் பகிரப்பட்டு வருகிறது.

ஆடவருக்கு எதிராகக் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்