சிங்கப்பூர் trending
ஹவ்காங்கில் IJooz வாங்கச் சென்றவரின் கை மாட்டிக்கொண்டது
(படம்: TikTok/yan)
This audio is generated by an AI tool.
ஆரஞ்சுப் பழச் சாறு அருந்த விரும்பியவருக்கு வந்த சோதனை...
ஹவ்காங் ஸ்ட்ரீட் 91இல் (Hougang Street 91)முதியவர் ஒருவரின் கை IJooz விற்பனை இயந்திரத்தில் மாட்டிக்கொண்டது.
ஹவ்காங் 1 கடைத்தொகுதிக்கு வெளியே இருந்த IJooz விற்பனை இயந்திரத்தில் அவர் வலது கை மாட்டிக்கொண்டது.
சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) நடந்தது.
இரவு சுமார் 7.50 மணிக்குச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை 'செய்தி'யிடம் சொன்னது.
சிங்கப்பூர்க் காவல்துறை அதிகாரிகளும் அவருக்கு உதவினர்.
அந்த ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
சம்பவத்தின் காணொளியை ஒருவர் தமது TikTok பக்கத்தில் பதிவிட்டார்.
IJooz நிறுவனம் சம்பவம் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததாக 8 World செய்தித்தளம் சொன்னது.
இயந்திரத்தைச் சோதனை செய்யத் தனது தொழில்நுட்பக் குழுவை அனுப்பியதாகவும் IJooz கூறியது. இயந்திரத்தில் கோளாறு இருப்பதாகத் தெரியவில்லை என்றது நிறுவனம்.
இருப்பினும் அதனைக் கூடுதல் சோதனைக்கு அனுப்பியுள்ளது.
விசாரணை தொடர்கிறது.