Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் உற்பத்தித் துறை கடந்த மாதம் 13.8% வளர்ச்சி கண்டது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் உற்பத்தித்துறை ஆண்டு அடிப்படையில், கடந்த மாதம் 13.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

உயிரியல் மருத்துவ உற்பத்தியைத் தவிர்த்து, மற்ற துறைகளில் 18 விழுக்காடு வளர்ச்சி பதிவானது.

மாத அடிப்படையில் கடந்த மாதம் உற்பத்தி 10.9 விழுக்காடு கூடியது.

உயிரியல் மருத்துவ உற்பத்தியைத் தவிர்த்து, மற்ற துறைகளில் அது 9.8 விழுக்காடு அதிகரித்தது.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், மூன்று மாதச் சராசரி அடிப்படையில், மே மாதத்தில் உற்பத்தி 8.4 விழுக்காடு ஏற்றம் கண்டது.

மின்னியல் பொருள்களின் உற்பத்தி கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் 33.6 விழுக்காடு வளர்ந்தது.

போக்குவரத்துப் பொறியியல் துறை, கடந்த ஆண்டைக் காட்டிலும், சுமார் 13 விழுக்காடு கூடியது.

துல்லியப் பொறியியல் குழுமம், 3.2 விழுக்காடு விரிவடைந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்