Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மோசடிகளைத் தவிர்க்க குறுந்தகவல்கள், சொடுக்கக்கூடிய இணைப்பு முகவரிகளின் பயன்பாடு குறித்து அரசாங்கம் மறுஆய்வு

வாசிப்புநேரம் -

குறுந்தகவல்கள்,  சொடுக்கக்கூடிய இணைப்பு முகவரிகள் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து அரசாங்கம் மறுஆய்வு செய்கிறது. 

மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்கக் குழுமம் கூறியது.

அரசாங்க அமைப்புகளுடனான தொடர்பில் பாதுகாப்பு அம்சம் குறித்துப் பொதுமக்களிடையே அக்கறை எழுந்துள்ளதை அறிவதாக அது சொன்னது.

இருப்பினும் சொடுக்கக்கூடிய இணைப்பு முகவரிகளை அகற்றினாலும், மோசடிக்காரர்கள் மற்ற சில வழிகளைக் கொண்டு பொதுமக்களை அணுகலாம் என்று குழுமம் கூறியது.

அரசாங்க அமைப்புகள் தற்போது அவற்றின் இணையத்தள முகவரியின் இறுதியில் “.gov.sg” என்பதைச் சேர்த்துவருகின்றன.

அரசாங்கத்தைச் சேர்ந்ததா என்பதை உறுதிசெய்த பிறகு இணையத்தளத்தை நாடும்படி பயனீட்டாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மோசடிக் குறுந்தகவல்களையும் அழைப்புகளையும் தடுப்பதற்கு பொதுமக்கள் ScamShield எனும் செயலியைப் பயன்படுத்தலாம்.

அது குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கவும், பயனீட்டாளர்களை மேலும் பாதுகாப்பதற்கும் முயற்சி எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

அண்மையில், OCBC வங்கியின் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடியில் சுமார் 470 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வங்கிகள் மின்னஞ்சல்களிலும் குறுந்தகவல்களிலும் சொடுக்கக்கூடிய இணைப்பு முகவரிகளை நீக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்