Skip to main content
SG60 கொண்டாட்டம்: சிறப்புக் குறும்படம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

SG60 கொண்டாட்டம்: சிறப்புக் குறும்படம்

வாசிப்புநேரம் -
SG60 கொண்டாட்டம்:  சிறப்புக் குறும்படம்

படம்: Marina Bay Sands

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரின் 60ஆவது தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) 4 நிமிடக் குறும்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

"Nothing Comes By Chance" என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள அந்தக் குறும்படம் சிங்கப்பூரின் வளர்ச்சியையும் உறுதியையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

பிரபல உள்ளூர் நடிகர்கள் டான் கேங் ஹுவா (Tan Kheng Hua), பியேர் பேங் (Pierre Png), தேசிய நீச்சல் வீரர் குவா செங் வென் (Quah Zheng Wen) பாடகி ஜெஸ்மின் சொகோ (Jasmine Sokko) ஆகியோர் குறும்படத்தில் நடித்துள்ளனர்.

சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கை, நாட்டின் மீள்திறன் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூருடன் சேர்ந்து அதன் 60 ஆண்டுக் கால வளர்ச்சியையும் சாதனைகளையும் கொண்டாடுவதில் பெருமைகொள்வதாக மரினா பே சாண்ட்ஸ் தலைமைச் செயலாக்க அதிகாரி பால் டவுன் (Paul Town) கூறினார்.

"Nothing Comes By Chance" குறும்படத்தைப் பொதுமக்கள் மரினா பே சாண்ட்ஸின் இணையத்தளத்தில் காணலாம்.
 
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்