சிங்கப்பூர் trending
இயந்திரத்தில் கலன் போட்ட பணியாளர்கள்- நகர மன்றம் விளக்கம்
TikTok/jiatong888
This audio is generated by an AI tool.
மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் நகர மன்றம், அதன் துப்புரவுப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட காணொளி குறித்து விளக்கம் அளித்திருக்கிறது.
காணொளியில் நகர மன்றத்தின் சீருடை அணிந்த ஊழியர்கள் சிலர் பானக் கலன்களைத் திரும்பக் கொடுக்கும் இயந்திரங்களில் அதிக அளவிலான போத்தல்களையும் கலன்களையும் திரும்பக் கொடுப்பது காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அதிக விமர்சனம் எழுந்தது.
ஊழியர்கள் தாங்கள் வாங்கிய கலன்களை இயந்திரத்திற்குள் போட்டுக்கொண்டிருந்ததாக நகர மன்றம் தெளிவுபடுத்தியது.
சில கலன்களை வட்டாரவாசிகள் ஊழியர்களிடம் கொடுத்ததாகவும் மன்றம் சொன்னது.
வேலை நேரத்திற்குப் பிறகே ஊழியர்கள் கலன்களைத் திரும்பக் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
குப்பைத் தொட்டிகள் அல்லது மறுபயனீட்டுத் தொட்டிகளிலிருந்து கலன்களை எடுக்க ஊழியர்களுக்கு அனுமதி இல்லை என்று அது கூறியது.
கலன்களைத் திரும்பக் கொடுக்கும் திட்டம் தொடங்கியதிலிருந்து அதைப் பணியாளர்களிடம் வலியுறுத்தியதாகவும் மன்றம் சொன்னது.
வேலை நேரத்திற்குப் பிறகு தனிப்பட்ட முறையில் இயந்திரங்களில் கலன்களைத் திரும்பக் கொடுக்கும்போது சீருடை அணியவேண்டாம் என்றும் பணியாளர்களிடம் அறிவுறுத்தியதாக அது குறிப்பிட்டது.
நகர மன்றத்தின் ஊழியர் என்ற நிலையில் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்ற தவறான புரிதலைத் தவிர்க்க அது உதவும் மன்றம் சொன்னது.
மற்றவர்களைப்போல துப்புரவுப் பணியாளர்களும் தங்கள் சொந்த நேரத்தில் மறுபயனீட்டுத் திட்டத்தில் பங்கேற்கலாம் என்று நகர மன்றம் தெரிவித்தது.