'பொருளியல் மந்தநிலை எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதைத் தெளிவாக முன்னுரைக்க முடியாது' - சிங்கப்பூர் நாணய வாரியம்
பொருளியல் மந்தநிலை எவ்வளவு காலம் நீடிக்கும், அது எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்பது குறித்துத் தெளிவாக முன்னுரைக்க முடியவில்லை என்று சிங்கப்பூர் நாணய வாரியம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

REUTERS/Edgar Su/File photo
பொருளியல் மந்தநிலை எவ்வளவு காலம் நீடிக்கும், அது எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்பது குறித்துத் தெளிவாக முன்னுரைக்க முடியவில்லை என்று சிங்கப்பூர் நாணய வாரியம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
கிருமித்தொற்று நிலவரம் எப்படி மாறுகிறது, உலக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள் என்னென்ன பலனைத் தருகின்றன என்பதைப் பொறுத்து, அது அமையும் என்று வாரியம் கூறியது.
சிங்கப்பூரின்
பொருளியல் 1 விழுக்காடு முதல் 4 விழுக்காடு வரை சுருங்கலாமென இதற்குமுன் முன்னுரைக்கப்பட்டது.
ஆனால் அதையும் தாண்டி இதுவரை காணாத அளவுக்குப் பொருளியல் சுருங்கக் கூடுமென வாரியம் எச்சரித்தது.
இந்நிலையில், COVID-19 கிருமித்தொற்றால் நேர்ந்துள்ள பொருளியல் பாதிப்பால் அதிகமானோர் வேலை இழந்து சம்பளக் குறைப்புக்கு ஆளாகலாம் என்றும் நாணய வாரியம் தெரிவித்தது.
பொருளியல் நடவடிக்கைகள் திடீரென நிறுத்தப்பட்டதால், பல்வேறு துறைகளில் ஊழியர்களுக்கான தேவை குறையும் என்று அது குறிப்பிட்டது.