Skip to main content
GIRO கட்டண முறை மறுஆய்வு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

GIRO கட்டண முறை மறுஆய்வு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் GIRO கட்டண முறையை மேலும் பாதுகாப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

சிங்கப்பூர் நாணய வாரியம் வங்கிகளுடன் இணைந்து பாதுகாப்பு அம்சங்களைப் பரிசீலிக்கும். வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் (Alvin Tan) அதனை நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அவர் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். புதிதாக அறிமுகமாகக்கூடிய சில நடைமுறைகளை அவர் விவரித்தார்.

GIRO மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சம் எவ்வளவு பணம் செலுத்தலாம், எத்தனை முறை பரிவர்த்தனை செய்யலாம் என்று நிர்ணயிக்க வாடிக்கையாளர்கள் வாய்ப்பு பெறலாம்.

அதோடு பரிவர்த்தனைகள் கூடுதலாகக் கண்காணிக்கப்படலாம்.

மற்ற நாடளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளும் பரிசீலிக்கப்படும் என்றார் துணையமைச்சர் டான்.

அண்மையில் GIRO கட்டண முறையில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. சில பெற்றோர் Little Professors Learning Centre நிறுவனத்திற்கு ஒரே மாதத்தில் இருமுறை கட்டணம் செலுத்த நேரிட்டது.

GIRO கட்டணம் தொடர்பாகச் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் சில புகார்களைப் பெற்றது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு மார்ச் 16ஆம் தேதி வரை 10 புகார்கள் பதிவாகின.

அந்தச் சிக்கல்களை முன்னிட்டு GIRO கட்டண முறை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்