Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொது இடங்களில் மின்னிலக்க நாணயச் சேவைகளின் விளம்பரங்களுக்குத் தடை

வாசிப்புநேரம் -

மின்னிலக்க நாணயச் சேவை நிறுவனங்கள், தங்களது சேவைகள்குறித்துப் பொது இடங்களிலும் சமூக ஊடகங்களிலும் விளரம்பரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாணய வாரியம் அறிவித்துள்ள புதிய வழிகாட்டி விதிமுறைகளின்படி தடை விதிக்கப்படுகிறது.

Bitcoin, Ethereum போன்ற மின்னிலக்க நாணயங்களின் மிகவும் ஆபத்தான பரிவர்த்தனைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க சிங்கப்பூர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அதுவும் அடங்கும்.

பல மின்னிலக்க நாணயச் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க, பொதுப் போக்குவரத்து நடுவங்கள், வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் விளம்பரம் செய்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாட்டுகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நிறுவனங்கள் அவற்றின் சொந்த நிறுவன இணையத்தளங்கள், செயலிகள், அல்லது நிறுவனத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட சமூக ஊடகத் தளங்களில் மட்டுமே இனி விளம்பரங்களை வெளியிட முடியும்.

ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்