Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பயங்கரவாதத்தில் மின்னிலக்க நாணயத் தளங்கள் - தடுப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூர் நாணய வாரியத்திற்குக் கூடுதல் அதிகாரம்

வாசிப்புநேரம் -
பயங்கரவாதத்தில் மின்னிலக்க நாணயத் தளங்கள் - தடுப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூர் நாணய வாரியத்திற்குக் கூடுதல் அதிகாரம்

(படம்: Pixabay)

Bitcoin உள்ளிட்ட மின்னிலக்க நாணயத் தளங்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றவும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்யவும் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் கூடுதல் அதிகாரத்தைச் சிங்கப்பூர் நாணய வாரியம் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (5 ஏப்ரல்) ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய சட்டம் வாரியத்துக்கு அந்தக் கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.

அதன்மூலம் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் மெய்நிகர் சொத்துச் சேவை வழங்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுவதோடு புதிய உரிமங்களையும் பெறவேண்டியிருக்கும்.

மோசடி அல்லது தவறான நடத்தையில் ஈடுபடும் நிதித்துறையினர் தடைசெய்யப்படக்கூடிய பொறுப்புகளும் செயல்களும் அதிகரிக்கப்படும்.

அவ்வாறு தடைவிதிக்கப்படுவோரின் விவரங்கள், வாரியத்தின் இணையப்பக்கத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் அல்லது தடை உத்தரவு காலாவதியாகும் காலம்வரை இருக்கும்.

வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான்(Alvin Tan) அதனை அறிவித்தார்.

நாணய வாரியத்தின் சட்டங்களை மீறுவது கடுமையான குற்றம் என்னும் சமிக்ஞையை அனுப்ப, அந்த 5 ஆண்டுத் தடை அவசியம் என்று அவர் சொன்னார்.

இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் மட்டுமே வெளிநாட்டு, இணைய முதலீட்டு மோசடிகளைத் தடுத்துவிட முடியாது என்றார் திரு. டான்.

பயனீட்டாளர்களுக்குப் போதிய விழிப்புணர்வூட்டுவதே சிறந்த தற்காப்பு என்றார் அவர்.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்