Skip to main content
மசாலா என்றால் என்ன
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மசாலா என்றால் என்ன - விளக்கும் கலைப்படைப்பு

வர்த்தகத்தில் நறுமணப் பொருள்கள் வகித்த முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் வண்ணம் 'மசாலா' என்னும் கலைப்படைப்பு இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

வர்த்தகத்தில் நறுமணப் பொருள்கள் வகித்த முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் வண்ணம் 'மசாலா' என்னும் கலைப்படைப்பு இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர்க் கலைஞர் குமாரி நாகப்பன் அதனை வெண்கலச் சிற்பங்களாக உருவாக்கியுள்ளார்.

Related article image

தமிழர் உணவுவகையில் மிளகாய், கிராம்பு, ஜாதிக்காய் ஆகிய நறுமணப் பொருள்கள் பரவலமாகப் பயன்படுப்படுகின்றன. அவற்றைப் சிற்பங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

Related article image

தமிழ்க் கடலோரப் பகுதிக்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையே நறுமணப் பொருள்களின் வர்த்தகம் ஒரு காலத்தில் பெருமளவில் நடந்திருக்கிறது.

அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் நறுமணப் பொருள்கள் விளையும் செடிகளைக் கொண்ட தோட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.

மசாலா என்றால் என்ன?

இந்தியச் சமூகங்களில் 'மசாலா' என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

'மசாலா' நறுமணப் பொருள்களின் கலவை எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

குறிப்பாகத் தமிழர் உணவுவகையில் நறுமணப் பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

நறுமணப் பொருள்களைக் கொண்டு அளவில்லாத எத்தனையோ கலவைகளைத் தயாரிக்க முடியும் என்பது மசாலாவின் தனிச்சிறப்பு.

இந்தியப் பாரம்பரிய உணவு வகைகள், நவீன உணவு வகைகள் என்று இரண்டிலும் இடம் பிடிப்பது 'மசாலா' மட்டுமே.

'மசாலா' - சொல் எப்படி வந்தது?

Related article image

'மசாலா' என்பது உருதுச் சொல். அரபு வார்த்தையான 'மசாலி' என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்தச் சொல் உருவானது. அரபு மொழியில் அதற்கு மூலப்பொருள் என்று அர்த்தம்.

அதனைத் தொடர்ந்து, நறுமணப்பொருள்களின் கலவை 'மசாலா' என்ற பெயரில் உலகெங்கிலும் பிரபலமானது.

இருப்பினும், இந்தியச் சமையலில் அது முக்கிய இடம் பிடித்தது.

இந்தியாவில் 'கரம் மசாலா' பிரபலமான நறுமணப் பொருள் கலவையாக விளங்குகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் 'கரம் மசாலா'வில் பயன்படுத்தப்படும் நிறுமணப் பொருள்கள் வேறுபடுகின்றன.


Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்