Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வரும் திங்கள் முதல் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை

வாசிப்புநேரம் -
வரும் திங்கள் முதல் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை

(கோப்புப் படம்: CNA/Gaya Chandramohan)

எதிர்வரும் திங்கட்கிழமை (13 பிப்ரவரி) முதல் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.

சுகாதார, பராமரிப்பு நிலையங்களின் உட்புறங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்காது.

COVID-19 கட்டுப்பாடுகள் கட்டங்கட்டமாகத் தளர்த்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு அந்த விவரங்களைச் சற்றுமுன் வெளியிட்டது.

எனினும் மருத்துவமனை வார்டுகள், மருந்தகங்கள், தாதிமை இல்லங்கள் ஆகிய இடங்களில் தொடர்ந்து முகக்கவசத்தை அணிய வேண்டும் என்று அமைச்சு தெரிவித்தது.

அத்தகைய இடங்களில் இருப்போரை பார்க்கச் செல்வோர், நோயாளிகள், பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு அது பொருந்தும்.

சுகாதாரத் துறையைத் தவிர்த்து, மற்ற சில நிறுவனங்களும் முகக்கவசம் அணிவதைத் தொடர்ந்து கட்டாயாமாக வைத்துக் கொள்ளலாம். உணவைக் கையாள்வோர், தனியார் நிறுவனங்கள் ஆகியவை அவற்றின் விருப்பப்படி அதைக் கட்டாயமாக்கலாம்.

முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் குறைவதால், பொதுமக்கள் குறிப்பாக, மூத்தோரும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்போரும் கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்