Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெற்றிலையை வைத்து பலகாரம் செய்வது எப்படி? MasterChef செளமியா விளக்குகிறார்!

ருசியான, சுவையான சமையலைச் சுலபமாக சமைப்பது எப்படி என்று யோசிக்கிறீர்களா?

வாசிப்புநேரம் -

தீபாவளி பண்டிகைக் காலத்தின்போது விருந்துக்குச் செல்வதைப் பெரும்பாலும் தவிர்க்க முடியாது. அதுவும் விருந்து உங்கள் வீட்டில் என்றால் ஏற்பாடுகள் களைகட்டத்தானே செய்யும்.

ருசியான, சுவையான சமையலைச் சுலபமாக சமைப்பது எப்படி என்று யோசிக்கிறீர்களா?

சிங்கப்பூரில் அண்மையில் நடந்த Masterchef சமையல் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இருவர் செய்தி நேயர்களுக்காகச் சிறப்பு சமையல் குறிப்புகளைச் சமைத்துக்காட்டியுள்ளனர்!

இன்று திருமதி. செளமியாவின் வெற்றிலை Tempurah உங்களுக்காக.

 
(படம்:அபிடா பேகம்)

நீங்களும் சமைத்துப் பார்த்து எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்.

Tempura வெற்றிலைக்குத் தேவையான பொருள்கள்

வெற்றிலைகள் - தேவையான அளவு

(படம்:அபிடா பேகம்)
(படம்:அபிடா பேகம்)
(படம்:அபிடா பேகம்)

கேக் மாவு - 100 கிராமும் 1/4 கிண்ண அளவும் தனித்தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.

Baking powder - 2 தேக்கரண்டி 

500 மில்லிலீட்டர் குளிர்பானம்

எண்ணெய்

பிஸ்தா பருப்பு / சீரகம் இரண்டையும் கலந்து வைத்துக்கொள்ளவும்


செய்முறை

வெற்றிலையின் காம்பை நறுக்கவும். 

பிறகு வெற்றிலையைச் சுமார் 10 விநாடிக்குச் சூடான பாத்திரத்தில் வாட்டவும். தனியே எடுத்துவைக்கவும்.

துண்டுகளாக்கப்பட்ட பாதாம் பருப்பை வதக்கவும்.

(படம்:அபிடா பேகம்)

கலவையை வெற்றிலையில் வைத்து குச்சி கொண்டு பொட்டலமாக மடித்து வைக்கவும்.

Tempura செய்ய தனியாக கேக் மாவு, உப்பு, baking powderஐ  குளிர்ந்த நீரோடு மாவுபோல செய்துவைக்கவும். 

 

மடித்துவைத்த வெற்றிலையை கேக் மாவில் புரட்டி எடுத்த பின்னர் Tempura மாவில் முழுமையாகப் போட்டு எடுக்கவும்.

பிறகு அதனைச் சூடான எண்ணெயில் சில விநாடிகள் மட்டும் பொரிக்கவும்.

உள்ளிருக்கும் குச்சியை நீக்கிய பிறகு பிஸ்தா பருப்பு, சீரகக் கலவை, குல்கந்து குல்பியோடு பரிமாறலாம்!

   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்