Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஐரோப்பிய இளையர் போட்டியில் வென்று தொடர்ந்து சாதனைகள் படைக்கும் சிங்கப்பூர் வீரர் மேக்ஸ் மேடர்

வாசிப்புநேரம் -
ஐரோப்பிய இளையர் போட்டியில் வென்று தொடர்ந்து சாதனைகள் படைக்கும் சிங்கப்பூர் வீரர் மேக்ஸ் மேடர்

Reuters

வெளியீடு : 14 Oct 2024 01:28PM புதுப்பிப்பு : 15 Oct 2024 04:58PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரின் KiteFoil நீர்சாகச வீரர் மேக்ஸ் மேடரின் (Max Maeder) நீண்டு வரும் வெற்றிப் பட்டியலில் மேலும் ஒரு மைல்கல்.

மேடர் இத்தாலியில் நடைபெற்ற Formula Kite ஐரோப்பிய இளையர் போட்டியின் பொதுப் பிரிவில் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஆனால் அவர் ஐரோப்பிய நாடுகளைப் பிரதிநிதிக்காததால் பட்டத்தைத் தவறவிட்டார்.

தொடர்ந்து சாதனை படைக்கும் மேடர் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு வென்றுள்ள நான்காவது போட்டி இது.

அவர் சென்ற வாரம் நடைபெற்ற 2024 IKA KiteFoil World Series போட்டியிலும் உலகப் பட்டத்தை வென்றார்.

18 வயது மேடர் சிங்கப்பூருக்காக ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆக இளையர்.

2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் ஜோசஃப் ஸ்கூலிங் தங்கப் பதக்கம் வென்ற பிறகு சிங்கப்பூருக்கு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பெருமை மேடரைச் சேரும்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்