Skip to main content
தெம்பனிஸ் மால் McDonald’s கிளை மூடப்படும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தெம்பனிஸ் மால் McDonald’s கிளை மூடப்படும்

வாசிப்புநேரம் -
தெம்பனிஸ் மால் McDonald’s கிளை மூடப்படும்
படம்: Google/Benson Kong
தெம்பனிஸ் மால் கடைத்தொகுதியில் (Tampines Mall) நீண்ட காலமாக இருந்துவரும் McDonald’s கிளை விரைவில் மூடப்படவுள்ளது.

அது தெம்பனிஸ் கடைத்தொகுதியில் 30 ஆண்டுக்கு மேலாகச் செயல்படுகிறது.

மார்ச் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு அது நிரந்தரமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

எதனால் அந்தக் கிளை மூடப்படுகிறது என்பது தெரியவில்லை.

தெம்பனிஸ் செண்ட்ரல் (Tampines Central), Our Tampines Hub ஆகிய இடங்களிலும் McDonald’s கிளைகள் உள்ளன.

தெம்பனிஸ் மால் கடைத்தொகுதியில் தலைமுறை தலைமுறையாக வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்தது குறித்துப் பெருமிதம் கொள்வதாக McDonald's பேச்சாளர் CNA-யிடம் தெரிவித்தார்.

சுமார் 4 மாதங்களுக்கு முன்பு தான் தெம்பனிஸ் மால் கடைத்தொகுதியிலிருந்து Isetan கடை வெளியானது.

அதுவும் அங்குப் பல ஆண்டாகச் செயல்பட்டு வந்தது.

மாறிவரும் சந்தைச் சூழலால் குத்தகையைப் புதுப்பிக்கவில்லை என்று Isetan அப்போது கூறியிருந்தது.

தெம்பனிஸ் மால் கடைத்தொகுதி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளப்போவதாகச் சென்ற ஆண்டு (2025) அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது.

மக்கள் புதிய கடைகளை எதிர்பார்க்கலாம் என்றும் அது சொன்னது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்