"வாழ்க்கைத் தரம் கிருமிப்பரவலுக்கு முன்பைப் போல் இருக்கிறது அல்லது மேம்பட்டுள்ளது" - சிங்கப்பூர்வாசிகளில் அதிகமானோர் கருத்து

AFP/Roslan RAHMAN
சிங்கப்பூர்வாசிகளில் பெரும்பாலோர் இப்போதைய வாழ்க்கைத் தரம் கிருமிப் பரவலுக்கு முன்பு இருந்ததைப் போலவே இருக்கிறது அல்லது அதைவிட மேம்பட்டிருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.
தொடர்பு, தகவல் அமைச்சு ஏற்பாடு செய்த கருத்துக் கணிப்பில் அது தெரியவந்தது.
2019-ஆம் ஆண்டு கோவிடுக்கு முந்திய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதாக அவர்கள் கூறினர்.
பதினைந்து வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுதுடையவர்களுடன் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
சுமார் ஆயிரத்து 50 பேர் அதில் பங்கேற்றனர்.
அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கை வலுவடைந்திருப்பதையும் கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
மக்களுக்கு இடையிலான நம்பிக்கையும் வலுவடைந்திருக்கிறது.
சிங்கப்பூர், அரசாங்கம், சுகாதார நிலையங்கள், சமூகங்கள் ஆகிய அனைத்துப் பிரிவுமே புதிதாக நோய்ப் பரவல் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பதாகக் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.