சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை 31 தட்டம்மைச் சம்பவங்கள்
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
சிங்கப்பூரில் இந்த ஆண்டு (2026) இதுவரை 31 தட்டம்மைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
பாதிக்கப்பட்டோரில் இருவர் சுற்றுப்பயணிகள்.
29 பேர் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள். அவர்களில் ஐவர் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகள் முதற்கட்டத் தட்டம்மைத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள இன்னும் தகுதிபெறவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) தெரிவித்தார்.
எஞ்சிய 24 பேரில் ஒருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.
இருவர் ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.
21 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரம் தெரியவில்லை.
இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டால் தட்டம்மைக்கு எதிராக அதிகப் பாதுகாப்பு கிடைக்கும் என்று திரு ஓங் கூறினார்.
அவ்வாறு செய்யாதோர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூரில் அண்மையில் அதிகரிக்கும் தட்டம்மைச் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குத் திரு ஓங் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

ஆதாரம் : Mediacorp Seithi