கைதிகளின் இளம் பிள்ளைகள் குற்றம் புரிகின்றனர் - தீர்வு?
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் சிறையில் இருக்கும் கைதிகளில் 15.4 விழுக்காட்டினருக்கு 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இருக்கின்றனர்.
அது 2024ஆம் ஆண்டு இறுதியின் நிலவரம்.
உள்துறை அமைச்சர் கா சண்முகம் அதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் லாய் (Victor Lye) கேட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாகப் பதில் தந்தார்.
எத்தனை கைதிகளுக்கு இளம் பிள்ளைகள் இருக்கிறார்கள், பிள்ளைகளின் நிலையை அமைச்சு கவனிக்கிறதா என்று திரு லாய் கேட்டார்.
சிறைவாசம் கைதிகளையும் அவர்களது குடும்பங்களையும் பாதிப்பதை உள்துறை அமைச்சு சுட்டிக்காட்டியது.
கைதிகளின் பிள்ளைகளில் சுமார் 20 விழுக்காட்டினர் குற்றம் புரிவதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.
2017இல் சிங்கப்பூர்ச் சிறைச் சேவை நடத்திய ஆய்வில் அது தெரிய வந்தது.
அது போன்ற சிக்கலைக் களைய நடவடிக்கை எடுப்பதாகத் திரு சண்முகம் கூறினார்.
கைதிகளுக்கு 21 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இருந்தால் சிங்கப்பூர்ச் சிறைச் சேவை அவர்களை அடையாளம் காண்கிறது.
கைதிகளின் அனுமதியோடு சமூக ஊழியர்கள் அவர்களது குடும்பத்திற்கு உரிய உதவி வழங்குவதாக அமைச்சர் சொன்னார்.