2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி - 28 ஆட்டங்களை இலவசமாகக் காணலாம்
This audio is generated by an AI tool.
FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை மீடியாகார்ப் (Mediacorp) நிறுவனம் பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் இறுதியாட்டம் உட்பட 28 ஆட்டங்கள் இலவசமாக ஒளிபரப்பப்படும்.
வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெறும்.
அவை அனைத்தையும் சந்தாதாரர்கள் மீடியாகார்ப்பின் mewatch தளத்தில் காணலாம்.
இலவசமாக ஒளிபரப்பப்படும் ஆட்டங்களை Channel 5 ஒளிவழியிலும் கண்டு களிக்கலாம்.
இம்முறை போட்டிகளை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
முதல்முறையாக 48 அணிகள் களமிறங்கவுள்ளன.
போட்டி ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதிவரை நடைபெறும்.
2022ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மொத்தம் 64 ஆட்டங்களே இருந்தன.
அப்போது அர்ஜென்ட்டினா கிண்ணத்தைக் கைப்பற்றியது.
2027ஆம் ஆண்டு FIFA மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் ஆட்டங்களையும் மீடியாகார்ப் ஒளிபரப்பும்.