Skip to main content
மீடியாகார்ப்பின் "அமர்க்கள தீபாவளி 2024"... இன்றிரவு...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மீடியாகார்ப்பின் "அமர்க்கள தீபாவளி 2024"... இன்றிரவு...

வாசிப்புநேரம் -
மீடியாகார்ப்பின் "அமர்க்கள தீபாவளி 2024"... இன்றிரவு...

(படம்: Mediacorp)

மீடியாகார்ப் நிறுவனம் தீபாவளிப் பண்டிகையை வரவேற்க இந்த ஆண்டு பல கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வரிசையில் 'அமர்க்கள தீபாவளி' நேரடி நிகழ்ச்சி இன்றிரவு 10 மணிக்கு இடம்பெறும்.

"குடும்பம்" என்ற கருப்பொருளுடன் நடைபெறும் நிகழ்ச்சியில் சிங்கப்பூர்க் கலைஞர்களின் ஆடல், பாடல்களைப் பார்க்கலாம்.

மீடியாகார்ப் வளாகத்தின் The Theatre உள்ளரங்கில் நடைபெறவிருக்கும் 'அமர்க்கள தீபாவளி' நிகழ்ச்சியை ஜெய் கணேஷ் ஈஸ்வரன், உதய சௌந்தரி, பிரேஹன் டினேஷ் ஆகியோர் வழிநடத்துவர்.

நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை இரவு 10 மணியிலிருந்து வசந்தம் ஒளிவழி, Mewatch தளம், மீடியாகார்ப்பின் YouTube ஆகியவற்றில் கண்டு ரசிக்கலாம்.

'அமர்க்கள தீபாவளி' நிகழ்ச்சியைத் தவிர்த்து 'அந்தகன்', 'மகாராஜா', 'குண்டூர் காரம்', 'தர்லா' போன்ற பல மொழி திரைப்படங்களும் ஒளியேறவிருக்கின்றன.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக 'சூப்பர் சமையல்' இடம்பெறும்.

'அந்தாதி' என்ற குறும்படமும் ஒளியேறவிருக்கிறது.

இந்தக் குறும்படம் சிங்கப்பூர் எழுத்தாளர் அனிதா தனபாலனின் 'The Lights That Find Us' என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது

'என்ன நடக்குது ஜூனியர்' எனும் சிறாருக்கான புத்தம் புதிய நிகழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்