பேருந்து, ரயில் நிலையங்களில் செய்தி
வாசிப்புநேரம் -
படம்: CNA/Wallace Woon
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் பயணிகள் கூடிய விரைவில் பேருந்து, ரயில் பயணத்தின் போதே அண்மைய செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியும்.
மீடியாகார்ப் நிறுவனம், Moove Media, SBS Transit ஆகியவற்றுடன் இந்தச் சேவையை வழங்கவுள்ளன.
வடகிழக்கு, டவுன்டவுன் MRT வழித்தடங்களில் உள்ள 52 நிலையங்களிலும் 15 பேருந்து முனையங்களிலும் இச்சேவை வழங்கப்படும்.
இந்தக் கூட்டு முயற்சி அன்றாடப் பயணங்களை மேலும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமானதாகவும் ஆக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் சுமார் 150 மின்னிலக்கத் திரைகளில் CNA தலைப்புச் செய்திகளை மக்கள் காணலாம்.
அன்றாடம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்பெறுவர்.
மின்னிலக்கச் சேவைகள், சமூகத் தளங்கள் ஆகியவற்றைப் பயணிகள் அதிகம் நாடும் சூழலில் இந்தப் புதிய முயற்சி உருவாகியுள்ளது.
மேலும் இத்தளங்கள் ஒருங்கிணைந்த விளம்பர வாய்ப்புகளையும் உருவாக்கும்.

ஆதாரம் : Mediacorp Seithi