Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

சின்னஞ்சிறு பிள்ளைகளுடன் செய்தி'யின் பொங்கலோ பொங்கல் ஒன்றுகூடல்

வாசிப்புநேரம் -
சின்னஞ்சிறு பிள்ளைகளுடன் செய்தி'யின் பொங்கலோ பொங்கல் ஒன்றுகூடல்
(படம்: நீவன் பஞ்சுநாதன்)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மீடியாகார்ப் நிறுவனத்தின் செய்திப் பிரிவு, பொங்கல் திருநாளை ஒட்டித் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக “பொங்கலோ பொங்கல் 2026” என்ற போட்டியை நடத்தியது.
Related article image
(படம்: நீவன் பஞ்சுநாதன்)

தமிழர் திருநாளாம் பொங்கலின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துக்கூற 'செய்தி'யின் இந்தப் போட்டி வாய்ப்பளிக்கிறது.

ஆண்டுதோறும் இணையம்வழி நடத்தப்பட்டுவரும் இப்போட்டிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் தொடர்ந்து ஆதரவு வழங்குகின்றனர்.

Related article image
(படம்: நீவன் பஞ்சுநாதன்)

அவர்களின் ஆதரவுக்கு நன்றி கூறும் விதமாக இரண்டாவது முறையாக "பொங்கலோ பொங்கல் 2026 ஒன்றுகூடல்" நிகழ்வு நடைபெறுகிறது.

நிகழ்ச்சி காலை 9 மணிக்கு லிட்டில் இந்தியாவில் உள்ள இந்திய மரபுடமை நிலையத்தில் தொடங்கியது.

Related article image
(படம்: நீவன் பஞ்சுநாதன்)
நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருகின்றனர்.
Related article image
(படம்: நீவன் பஞ்சுநாதன்)
சொல் விளையாட்டு, வில்லுப்பாட்டு போன்ற பல அங்கங்கள் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்