"AI திட்டம், இளம் செய்தியாளர் சவால்" - 2 பிரிவுகளில் அனைத்துலக ஊடக விருதுகளைப் பெற்றது மீடியாகார்ப்
வாசிப்புநேரம் -

(படம்: CNA)
நியூயார்க்கில் நடைபெற்ற அனைத்துலகச் செய்தி ஊடகச் சங்கத்தின் (INMA) அனைத்துலக ஊடக விருதளிப்பு நிகழ்ச்சியில் மீடியாகார்ப் நிறுவனம் அதன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் (AI) திட்டத்துக்கான அங்கீகாரத்தைப் பெற்றது.
CNA ஒளிபரப்பும் செய்திகளிலிருந்து காணொளிகளை எடுத்து தானாகவே அவற்றை வெட்டி, உடனுக்குடன் இணையவாசலில் பதிவிட அந்த AI தொழில்நுட்பம் உதவுகிறது.
இந்தத் திட்டம் AI SmartCut என்று அழைக்கப்படுகிறது. இது செய்தியறையின் புத்தாக்க உருமாற்றத்துக்கான பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது.
இந்த AI திட்டத்தின்வழி ஊழியர்களின் தீவிர வேலைகள் இலகுவாகும். அதோடு CNA செய்தி ஆசிரியர்கள் ஊடகம் சார்ந்த இதர வேலைகளில் இன்னும் அதிகமாக ஈடுபடவும் முடியும். அது CNA வாசகர்களுக்குப் புதுவித அனுபவத்தையும் கொடுக்கிறது.
"2022 இளம் செய்தியாளருக்கான சவால்" நிகழ்ச்சியை ஏற்று நடத்திய 8world செய்திக்கும் நிகழ்ச்சியில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
செய்தி முத்திரையைக் கட்டியெழுப்ப நடத்தப்பட்ட சிறந்த நிகழ்ச்சிக்கான பிரிவில் அப்பதக்கம் வழங்கப்பட்டது.

ஆதாரம் : CNA