Skip to main content
சமூகப் பொருளாதார நிலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சமூகப் பொருளாதார நிலை - தேர்வு மதிப்பெண்: சம்பந்தம் இருக்கிறதா?

வாசிப்புநேரம் -
சமூகப் பொருளாதார நிலை - தேர்வு மதிப்பெண்: சம்பந்தம் இருக்கிறதா?
படம்: Facebook/Chan Chun Sing
உயர் சமூகப் பொருளாதார நிலையைச் சேர்ந்த மாணவர்கள் பிற மாணவர்களைவிடக் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.

அது பிற நாடுகளில் காணப்படும் போக்குடன் ஒத்துப்போகிறது.

நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விக்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அவ்வாறு கூறினார்.

மாணவரின் சமூகப் பொருளாதார நிலைக்கும் அவர் பெறும் மதிப்பெண்களுக்கும் உள்ள தொடர்பு குறித்துக் கேள்வி எழுந்தது.

சமூகப் பொருளாதார நிலையைப் பொறுத்து மாணவர்கள் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் (PSLE) சராசரியாக எத்தனை மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்று கேட்கப்பட்டது.

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெறுகின்றனர்.

அனைத்துலகத் தரத்தின்படி கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் அவர்கள் முன்னணி வகிக்கின்றனர் என்றார் கல்வி அமைச்சர்.

2022ஆம் ஆண்டு வெளியான அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுத் திட்ட (PISA) ஆய்வு முடிவுகளில் அது தெரியவந்தது.

ஒன்றிணைந்த சமூகமாக மாணவர்களுக்குக் கைகொடுக்க இதர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று திரு லீ கூறினார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்