Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேவைகேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளுக்காகக் காத்திருக்கும் காலம் குறையவுள்ளது

வாசிப்புநேரம் -

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அடுத்த ஈராண்டுகளில் தேவைகேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளுக்கு வாடிக்கையாளர்கள் நீண்ட காலம் காத்திருக்கவேண்டி வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டுமானத் துறையில் பணிகள் துரிதமடைந்திருப்பதே அதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. 

வீட்டுக்காகக் காத்திருக்கும் சராசரிக் காலம் நான்காண்டில் இருந்து நாலரை ஆண்டுக்குள் இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.

ஒப்புநோக்க, கிருமிப்பரவலின்போது காத்திருக்கும் காலம் நான்கு முதல் ஐந்தாண்டுவரை எனும் நிலை இருந்தது.  

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், கட்டுமானத் துறையினர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் வீடுகளைக் கட்டும் பணி துரிதமடைந்திருப்பதாக அமைச்சர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்