பலதுறை மருந்தகத்தில் நோயாளிகள் காத்திருப்பு நேரம் குறைந்திருக்கிறது
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: Try Sutrisno Foo)
சிங்கப்பூரில் முன்பதிவு செய்யாமல் நேரடியாகப் பலதுறை மருந்தகம் செல்வோர் காத்திருக்கும் சராசரி நேரம் குறைந்திருக்கிறது.
2023இல் நோயாளிகள் சராசரியாக சுமார் 17 நிமிடம் காத்திருக்க வேண்டியிருந்தது.
கடந்த ஆண்டு (2025) அது 8 நிமிடமாகக் குறைந்தது.
பொதுவாகக் கடந்த ஆண்டு 95 விழுக்காட்டு நோயாளிகள் சுமார் ஒன்றே கால் மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
2023இல் அவர்கள் 2 மணி நேரத்துக்கும் சற்றுக் கூடுதலாக காத்திருக்க நேர்ந்தது.
சுகாதார மூத்த துணையமைச்சர் கோ பூ கூன் (Koh Poh Koon) நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.
முன்பதிவு செய்திருந்த நோயாளிகள் சராசரியாக காத்திருக்கும் நேரம் கடந்த ஆண்டு சுமார் 10 நிமிடம்.
95 விழுக்காட்டு நோயாளிகள் அதிகபட்சம் 52 நிமிடம் காத்திருந்தனர்.
நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சி எடுக்கிறது என்று திரு கோ கூறினார்.

ஆதாரம் : Mediacorp Seithi