Skip to main content
நாடாளுமன்ற உறுப்பினர் படித்தொகை உயர்வு... தகவல்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நாடாளுமன்ற உறுப்பினர் படித்தொகை உயர்வு... தகவல்கள்

வாசிப்புநேரம் -
நாடாளுமன்ற உறுப்பினர் படித்தொகை உயர்வு... தகவல்கள்

(கோப்புப் படம்: AP/Vincent Thian)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதப் படித்தொகை (Allowance) அக்டோபர் 15 முதல் 13,750 வெள்ளியிலிருந்து 18,500 வெள்ளியாக உயர்கிறது.

2011க்குப் பிறகு படித்தொகையில் செய்யப்படும் முதல் மாற்றம் இது.

சுயேச்சை மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து அது அறிவிக்கப்பட்டது.

படித்தொகை உயர்வால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 6.6 மில்லியன் வெள்ளிக்குமேல் செலவாகும் என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) குறிப்பிட்டார்.

படித்தொகையில் என்னென்ன அடங்கும்?

படித்தொகையில் மத்திய சேமநிதிப் பங்களிப்பும் வரிக்கழிவும் செய்யப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் படித்தொகையின் ஒரு பகுதியைத் தங்கள் அரசியல் கட்சிக்கும் வழங்குகின்றனர்.

அவர்களுக்கு ஓய்வூதியம் (Pension) கிடையாது.

மருத்துவச் சலுகைகள் பொதுச்சேவை நடைமுறைக்கேற்ப வழங்கப்படுகின்றன.

யாருக்கு முழுப் படித்தொகை கிடைக்கும்?

பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் முழுப் படித்தொகையைப் பெறுவர்.

அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பதவி வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதைப் பெறுவர்.

NCMP, NMP உறுப்பினர்களுக்கு?

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களின் (NCMP) படித்தொகை மாதம் 5,550 வெள்ளியாக உயரும்.

முழு வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு 2017 முதல் இருப்பதை அது பிரதிபலிக்கிறது.

நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான (NMP) விகிதம் 15 விழுக்காடாகவே இருக்கும்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு?

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் படித்தொகையில் இருமடங்கு தொடர்ந்து வழங்கப்படும்.

இதன்படி அந்தப் பதவிக்கான ஆண்டுப் படித்தொகை 385,000 வெள்ளியிலிருந்து 518,000 வெள்ளியாக உயர்கிறது.

தற்போது அந்தப் பதவி காலியாக உள்ளது.

படித்தொகை எதற்குப் பயன்படுகிறது?

தொகுதி நிகழ்ச்சிகள், நாடாளுமன்றப் பணிகள் உள்ளிட்ட செலவுகளுக்கு அது பயன்படுகிறது.

தொண்டர்களுக்கான உணவு, தொகுதியில் நடைபெறும் இறுதிச்சடங்குகளில் வழங்கப்படும் அனுதாபத் தொகை போன்ற செலவுகளும் இதில் அடங்கும்.

படித்தொகையை உயர்த்துவது ஏன் அவசியம்?

பணவீக்கத்தைக் கருத்தில்கொண்டு படித்தொகை உயர்த்தப்படுவதாக அமைச்சர் சான் கூறினார்.

முறையான படித்தொகை வழங்கப்படுவதால் மக்கள் செயல் கட்சியும் பாட்டாளிக் கட்சியும் திறமையான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துக் களமிறக்க முடிந்ததாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பல்வேறு பின்னணிகளையும் அனுபவங்களையும் கொண்ட உறுப்பினர்கள் இருப்பதை அவர் சுட்டினார்.

அவர்கள் விவாதங்களில் வெவ்வேறு கண்ணோட்டங்களை முன்வைப்பதாகவும் திரு வோங் கூறினார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்