Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மொறுமொறு மேரி பிஸ்கட், காகிதக் கப்பல்... பார்க்கில் பெரிதாய்ப் பொருத்திப் பார்க்க வைத்தனர்

வாசிப்புநேரம் -
மொறுமொறு மேரி பிஸ்கட், காகிதக் கப்பல்... பார்க்கில் பெரிதாய்ப் பொருத்திப் பார்க்க வைத்தனர்

படங்கள்: Isaiah Cheng

தேசியக் கலை மன்றம் பலரையும் பழைய இனிய ஞாபகங்களில் ஆழ்த்த "As You Were" - நீ இருந்ததைப் போலவே - என்ற புதியதொரு கலைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. 

சிங்கப்பூரின் பீஷான்-அங் மோ கியோ பூங்கா, ஜூரோங் லேக்  பூங்காக்கள், பொங்கோல் வாட்டர்வே பூங்கா (Bishan-Ang Mo Kio Park, Jurong Lake Gardens, Punggol Waterway Park) ஆகிய பூங்காக்களில் சிறப்புக் கலைப் படைப்புகள் பொருத்தப்பட்டன!

என்ன, எங்கே, யார்?

பீஷான்-அங் மோ கியோ பூங்கா

  • பாதி உண்ணப்பட்ட மேரி பிஸ்கட் (Marie Biscuit)
  • உருவாக்கியவர் டானியல் சோங் (Daniel Chong)
படம்: Isaiah Cheng

பூங்காவுக்குச் சென்று பிடித்தவர்களுடன் நேரம் செலவழித்து மேரி பிஸ்கட் ஒன்றைச் சாப்பிடும் வேளையில் அதைத் 'தொப்' என்று புல்லில் ஒரு சிலர் கைதவறிப் போட்டிருக்கலாம்...

அதுபோன்ற எளிய, எழில்மிக்க தருணங்களை நினைத்து ஏங்கும் நெஞ்சங்களுக்குப் படைக்கப்பட்ட கலைப்பொருள்...

  • என்னைக் கேட்க முடிகிறதா? (Can You Hear Me)
  • உருவாக்கியவர்கள் குவெக் ஜியா ஜி, ஆரன் லிம் (Quek Jia Qi, Aaron Lim) 
படம்: Isaiah Cheng


தொலைபேசியின் நச்சரிப்பு இல்லாத உலகத்தில் சிறு பிள்ளைகள் விளையாடும் விளையாட்டாக குவளை-கயிற்றுத் தொலைபேசி பயன்படுத்தப்பட்டது. 

குவளைக்குள் ஒருவர் "என்னைக் கேட்க முடிகிறதா?" என்று கேட்க... இன்னொருவர் கேட்டுக்கொண்டே சிரிக்க... அது ஓர் இனிய காலம்!

ஜூரோங் லேக் பூங்கா (Jurong Lake Gardens) 

  • கனவு தொடரவேண்டும் (Our Dreams Must Continue)
  • உருவாக்கியவர் தியோ ஹுவே லிங் (Teo Huey Ling) 
படம்: Isaiah Cheng


பகல் கனவு காணும்போது கேலிச்சித்திரப் படங்களில் கதாபாத்திரத்தின் தலைமேல் ஒருவிதக் குமிழி தோன்றும் அல்லவா? 

குமிழிக்குள் பல நிறங்களில் அழகிய வடிவங்களைப் போலவே கலைப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. 

பொங்கோல் வாட்டர்வே பார்க் (Punggol Waterway Park)

  • மிதக்கிறேன் (Afloat)
  • உருவாக்கியவர் அங் சொங் நியன் (Ang Song Nian) 
படம்: Isaiah Cheng

எட்டு மீட்டர் நீளமுள்ள காகிதக் கப்பல் உருவத்திலான மிதவை... கப்பலின் பெரும்பகுதி முகக்கவச உருவத்திலானது.. 

கிருமிப்பரவல் சூழலில் நம்மைப் பாதுகாத்துக்கொண்டிருந்த முக்கக்கவசம் நம்மை மூழ்கவிடாமல் மிதக்க உதவியது என்பதை அது குறிக்கிறது. 

  • மதிய விளையாட்டு [n o o n (at play)]
  • உருவாக்கியவர்கள் ஹேசல் லிம், அடலின் குவே (Hazel Lim, Adeline Kueh)
படம்: Isaiah Cheng

2 பலகை ஊஞ்சல்கள் - விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலான பாலத்தைப் போன்று செயல்படும் உணர்வை வெளிக்கொணர அமைக்கப்பட்ட கலைப்பொருள்கள்...
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்