Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மனநலத்தை ஊக்குவிக்கும் சமூகத் திட்டங்களை மேம்படுத்துவது அவசியம்: அதிபர் ஹலிமா

சிங்கப்பூரில் மனநலத்தை ஊக்குவிக்கும் சமூகத் திட்டங்களை மேம்படுத்துவது அவசியம்: அதிபர் ஹலிமா

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் மனநலத்தை ஊக்குவிக்கும் சமூகத் திட்டங்களை மேம்படுத்துவது அவசியம் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

மனநலத்தைப் பேணும் அமைப்புகளை மட்டும் சார்ந்திருக்கக்கூடாது என்றார் அவர்.

நோய்த்தொற்றால் மக்களிடையே கவலை அதிகரித்துள்ள நிலையில் அது மேலும் முக்கியம் என்று அதிபர் வலியுறுத்தினார்.

PSALT Care அறநிறுவனத்தின் மனநலப் பராமரிப்பு நிலையத்துக்குச் சென்றிருந்தபோது அதிபர் ஹலிமா அவ்வாறு கூறினார்.

மனநலப் பிரச்சினை கொண்டோருக்கும், போதைப் புழக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கும் அந்த அறநிறுவனம் உதவி செய்துவருகிறது.

அதிரடித்திட்டம் நடப்பில் இருந்தபோதும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அது தொடர்ந்து சேவை வழங்கியது.

ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உதவியோடு பல நலத் திட்டங்களை அந்த அறநிறுவனம் நடத்திவருகிறது.

மனநல பாதிப்பிலிருந்து மீண்டுவருவதற்கு அத்தகைய நடவடிக்கை முக்கியப் பங்காற்றும் என்று அதிபர் குறிப்பிட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்