Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இளையர்களின் மனநலம் குறித்து தேசிய அளவில் ஆய்வு நடத்தப்படும்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் முதல்முறையாக இளையர்களின் மனநலம் குறித்த தேசிய அளவிலான ஆய்வு நடத்தப்படவுள்ளது.

இளையர்களைப் பாதிக்கும் விவகாரங்கள் பற்றி ஆராய்வது அதன் நோக்கம்.

சுகாதார அமைச்சின் நிதியாதரவில் நடத்தப்படும்  ஆய்வின்மூலம் சிங்கப்பூர் இளையர்களின் எதிர்கால மனநலப் போக்கைக் கவனிக்க முடியும்.

இளையர்கள் கல்வி, வேலை வாழ்க்கையை எவ்வாறு கையாள்கின்றனர், அவர்களின் மனநலச் சுகாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அம்சங்கள் யாவை என்பது குறித்து ஆராயப்படும்.

கைத்தொலைபேசிக்கு அடிமையாவது, தூக்கமின்மை போன்ற இளையர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் தகவல் சேகரிக்கப்படும்.

ஆய்வு மூவாண்டுக்கு நடைபெறும்.

அதில் 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 2,600 இளையர்கள் கலந்துகொள்வர்.

சிங்கப்பூரில் மனநோய்க்கு ஆளாவோரில் பெரும்பாலோர் இளையர்கள் என்று மனநலக் கழகம் கண்டறிந்துள்ளது.

இளையர்களின் உடனடி முன்னுரிமைகளை அடையாளங்கண்டு அவர்களின் மனநலத்தை மேம்படுத்துவதற்கு உகந்த நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க ஆய்வுத் தகவல்கள் கைகொடுக்கும்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்