Skip to main content
நேப்பாளத்துக்கு $120,000 உதவி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நேப்பாளத்துக்கு $120,000 உதவி - சிங்கப்பூரின் Mercy Relief அமைப்பு

வாசிப்புநேரம் -
நேப்பாளத்துக்கு $120,000 உதவி - சிங்கப்பூரின் Mercy Relief அமைப்பு

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரின் லாப நோக்கமில்லா Mercy Relief அமைப்பு நேப்பாளத்திற்கு அவசர உதவி வழங்கவுள்ளது.

உதவியின் மதிப்பு 120,000 வெள்ளி.

பனிப்பாறைச் சரிவு, திடீர் வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும்.

இந்த வார இறுதியில் ஒரு குழு நேப்பாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதிக்குச் செல்லும்.

ஏறக்குறைய 1,800 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும்.

உதவிப் பொருள்கள் மக்களைச் சென்றடைய Mercy Relief உள்ளூர் அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

முதல் கட்டமாகச் சுமார் 600 பேருக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்படும்.

அவர்கள் மூன்று தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

உணவு, தண்ணீர், சுகாதாரப் பொருள்கள், உடைகள், போர்வைகள் போன்றவை வழங்கப்படும்.

சாலைப் போக்குவரத்துச் சீரானதும் மற்ற பகுதிகளுக்கும் உதவிப் பொருள்கள் அனுப்பப்படும்.

சேதமடைந்த உள்கட்டமைப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைவது பெரும் சவாலாக உள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீண்டகாலத் தேவைகளையும் குழு மதிப்பிடும்.

தற்காலிகத் தங்குமிடம், கல்வி, மனநல ஆதரவு ஆகியவை இதில் அடங்கும்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்