Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒரு வாரச் சிறைக்கு எதிராக வெளியுறவு அமைச்சின் அதிகாரி செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது

வாசிப்புநேரம் -
வெளியுறவு அமைச்சின் முன்னாள் தலைமை இயக்குனர் கில்பர்ட் ஓ ஹின் வான் (Gilbert Oh Hin Kwan) ஒரு வாரச் சிறைத்தண்டனைக்கு எதிராகச் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை ஊழியர் ஒருவரிடம் பொய்த்தகவல் கொடுத்த குற்றத்திற்காக, 46 வயது ஓவுக்குச் சென்ற ஏப்ரல் மாதம் தண்டனை விதிக்கப்பட்டது.

அரசதந்திரப் பொட்டலப் பை ஒன்றில் இருந்த விலையுயர்ந்த கடிகாரங்களும் மற்ற பொருள்களும் தமது தந்தைக்குச் சொந்தமானது என்று அவர் பொய் சொல்லியிருந்தார்.

பொருள்கள் உண்மையில் சீனாவிலிருந்த ஓவின் நண்பருக்குச் சொந்தமானவை. தனிப்பட்ட முறையில் அவற்றைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவர ஓ சம்மதித்திருந்தார்.

அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சரியானதே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்