Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'வெளிநாட்டிலிருந்து நெருக்குதல்கள் வந்தாலும் மரணத் தண்டனை போன்ற விவகாரங்களில் நிலை மாறக்கூடாது'

வாசிப்புநேரம் -
'வெளிநாட்டிலிருந்து நெருக்குதல்கள் வந்தாலும் மரணத் தண்டனை போன்ற விவகாரங்களில் நிலை மாறக்கூடாது'

(கோப்புப் படம்: Marcus Mark Ramos)

சிங்கப்பூர் அதன் கொள்கைகளில் உறுதியாக இருக்கவேண்டும் என்று இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ கூறியிருக்கிறார்.

மரணத் தண்டனை போன்ற விவகாரங்களில் வெளிநாட்டிலிருந்து நெருக்குதல்கள் வந்தாலும் அந்த நிலை மாறக்கூடாது என்றார் அவர்.

அனைத்துலக அமைப்புகள், உள்ளூர் ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து அதிகரிக்கும் நெருக்குதல்களின் மத்தியில் நாட்டின் நிலைப்பாட்டைத் திருமதி. தியோ மறுஉறுதிப்படுத்தினார்.

உள்துறை அமைச்சின் தேசிய தின விருது நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் கா. சண்முகத்திற்குப் பதிலாக அவர் பேசினார்.

சிங்கப்பூரர்களில் 70 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் உள்பட, மரணத் தண்டனையை ஆதரிப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளதை அவர் சுட்டினார்.

அதனால் இன்னும் கூடுதலான உயிர்கள் காப்பாற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்