Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கடுமையாக நோய்வாய்ப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் சிகிச்சைக்கு நிதி உதவி

வாசிப்புநேரம் -
கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களின் சிகிச்சைக்கு உடனடி நிதியாதரவு வழங்கும் புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது.

Migrant Worker CritiCare Fund எனும் அந்தத் திட்டம் சமூகத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களின் காப்புறுதியில் அடங்காத கடுமையான நோய்களுக்கான சிகிச்சைகளுக்குக் கட்டணம் செலுத்தத் திட்டம் முனைகிறது.

குறைந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உயிரைக் காப்பாற்றக்கூடிய சிகிச்சைகளை வழங்குவது நோக்கம் எனத் திட்டத்தின் செயலாளர் கூறினார்.

திட்டத்திற்கு மக்கள் அளிக்கும் நன்கொடைகளை Ray of Hope அறநிறுவனம் நிர்வகிக்கும்.

அடுத்த ஆண்டு 410,000 வெள்ளி திரட்டுவது திட்டத்தின் நோக்கம்.

அது சுமார் ஈராண்டுக்கு 20 வெளிநாட்டு ஊழியர்களின் சிகிச்சைகளுக்கு ஆதரவு அளிக்க உதவும்.

பொதுமக்களின் நன்கொடைகள், அறக்கட்டளைகள், நிறுவனங்களுடனான கூட்டணி ஆகியவை மூலம் அந்தப் பணத்தைத் திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆதாரம் : CNA/mt(kg)

மேலும் செய்திகள் கட்டுரைகள்