Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும், விழிப்புடன் இருக்கவேண்டும்"

வாசிப்புநேரம் -
"சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும், விழிப்புடன் இருக்கவேண்டும்"

(File Photo: Calvin Oh/CNA)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

அவர்கள் பாதிப்புக்கு உள்ளான மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

கடந்த ஆண்டு மோசடிகளுக்கு ஆளாகியோரில் 15 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் வேலை அனுமதியில் சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த மோசடிகளில் மொத்தம் 25 மில்லியன் வெள்ளி பறிபோனது. 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் அது 5 மடங்கு அதிகம். 

குற்றத்தடுப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் சுமார் 600 வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கலைநிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

விளையாட்டுகள், இருவழித் தொடர்பு நடவடிக்கைகள் ஆகியவை அதில் இடம்பெற்றன.

DBS வங்கி, மனிதவள அமைச்சு ஆகியவை கலைநிகழ்ச்சியில் இணைந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, எந்தெந்த வழிகளில் உதவி நாடலாம் என்று எடுத்துரைத்தன.

உள்துறை, தேசிய வளர்ச்சித் துணையமைச்சர் முகமது ஃபைஷால் இப்ராஹிம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மோசடிகளுக்கும் ஏனைய குற்றங்களுக்கும் எதிராகப் போராடுவது ஒரு சமூக முயற்சி என்று அவர் குறிப்பிட்டார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்