Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருதுகள் கொடுத்துக் கௌரவித்த குடிமைத் தற்காப்புப் படை

வாசிப்புநேரம் -
ஆபத்தில் உதவிய வெளிநாட்டு  ஊழியர்களுக்கு விருதுகள் கொடுத்துக் கௌரவித்த குடிமைத் தற்காப்புப் படை

படம்: CNA/Raydza Rahman

வெளியீடு : 06 Aug 2025 04:44PM புதுப்பிப்பு : 06 Aug 2025 05:32PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தஞ்சோங் காத்தோங்கில் ஏற்பட்ட திடீர்ப் பள்ளத்தில் விழுந்த பெண்ணை மீட்க உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேலும் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

அண்மையில் அவர்கள் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் அழைப்பில் இஸ்தானாவுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் அதிபரையும் அவரது துணைவியாரையும் சந்தித்தனர்.

அவர்களை மேலும் கௌரவிக்க சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அவர்களுக்கு சமூக உயிர்க்காப்பாளர் விருது (Community Lifesaver Award) வழங்கியது.
Related article image
படம்: CNA/Raydza Rahman
மரீன் பரேட் குடிமக்கள் ஆலோசனைக் குழுக்கள் ஏற்பாடு செய்த பாராட்டு நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன.

உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களைக் காப்பாற்றும் பொதுமக்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

மேலும் அவர்களைப் பாராட்டும் வகையில் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
Related article image
படம்: CNA/Raydza Rahman
சிங்டெல் (Singtel) நிறுவனம் அந்த வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பரிசுப்பைகளை வழங்கியது. பையில் SG60 மெர்லயன் (Merlion) சாவிக்கொத்து, விசிறி, 2.5 கிலோகிராம் அரிசி, இதர அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவை இருந்தன.

மேலும் அவர்களுக்கு ஓராண்டு இலவச 5G இணையச்சேவையும் அவர்களுடைய பெயர்கள் அச்சிடப்பட்ட புத்தகங்களும் வழங்கப்பட்டன.
Related article image
படம்: CNA/Raydza Rahman
சிங்கப்பூரில் பலர் அவர்களுடைய நன்றியைத் தெரிவிக்கிறார்கள் என்று ஊழியர்களின் மேற்பார்வையாளர் திரு பிச்சை உடையப்பன் சுப்பையா கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கானத் துணையமைச்சர் கோ பெ மிங் (Goh Pei Ming) கலந்துகொண்டார். ஊழியர்களின் துணிச்சலை அவர் பாராட்டினார்.
Related article image
படம்: CNA/Raydza Rahman
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்