Skip to main content
வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேலும் எளிதாகும் சுகாதாரச் சேவை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேலும் எளிதாகும் சுகாதாரச் சேவை

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேலும் எளிதாகும் சுகாதாரச் சேவை

படம்: CNA/Lim Li Ting

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் மேம்பட்ட திட்டத்தின்கீழ் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை மேலும் எளிதாகப் பெறமுடியும்.

அடிப்படைப் பராமரிப்புத் திட்டம் எனும் அந்த முயற்சியின்கீழ் ஊழியர்கள் வசிக்கும் இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் மருந்தகங்கள் இருப்பது உறுதிசெய்யப்படும்.

தற்போது அது மூன்று கிலோமீட்டராக இருக்கிறது.

அடிப்படைப் பராமரிப்புத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நடப்புக்கு வரும்.

வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகளும் ஓர் ஊழியருக்கு ஆண்டுக்கு 41 வெள்ளி வரை சேமிக்கமுடியும்.

முதல் ஆறு சுகாதாரப் பராமரிப்பு வட்டாரங்கள் இனி நான்கு பெரிய வட்டாரங்களாக ஒன்றிணைக்கப்படும்.

இதனால் இன்னும் கூடுதலான ஊழியர்களுக்குச் சேவை வழங்கமுடியும்.

சுகாதாரச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் அது பெருமளவு வாடிக்கையாளர்களைப் பெற்றுத்தரும்.

குறைந்த செலவில் சேவை கிடைக்கவும் அது வழியமைக்கும்.

முதலாளிகளுக்கான புதிய இணையப் பதிவுத் தளம், ஊழியர்கள் மருத்துவரைக் காண முன்பதிவு செய்துகொள்ளும் வசதி போன்றவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்