Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சிங்கப்பூருக்குப் புதிதாய் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம்... அப்படியென்றால்?

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்குப் புதிதாய் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Settling-In Programme எனப்படும் ஒருநாள் அறிமுகப் பயிற்சித்திட்டம் நடத்தப்படுகிறது. 

அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள 'செய்தி' மனிதவள அமைச்சையும் அதன் இணையத்தளத்தையும் நாடியது. 

அறிமுகப் பயிற்சித்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகின்ற தலைப்புகள்: 

  • சிங்கப்பூரைப் புரிந்துகொள்ளுதல்
  • உள்ளூர்ச் சமூகத்தின் வழக்கங்கள்
  • பிறருக்குப் பணம் அனுப்புதல்
  • உரிமம் பெறாமல் மற்றவர்களுக்குக் கடன் அளிப்பவர்கள் 
  • வெளிநாட்டு ஊழியர்களுக்கான அடிப்படைப் பராமரிப்புத் திட்டம்
  • மருத்துவ நிலையங்கள்
  • திறன்பேசிகளில் உள்ள செயலிகளின் தொடர்பான பயிற்சி
  • வேலைச் சட்டங்கள் 
  • வேலையில் அடிபடுவதன் தொடர்பில் இழப்பீட்டு உரிமைகள் 
  • SGSecure, மற்ற முக்கிய வேலைச் சட்டங்கள்
  • மனநலன் 

யாரெல்லாம் பயிற்சித்திட்டத்திற்குக் கட்டாயம் செல்லவேண்டும்?

உற்பத்தித்துறையில்: 

முதன்முறையாகச் சிங்கப்பூரில் வேலைசெய்பவர்கள் 

கட்டுமானத் துறை, கடல்துறை: 

முதன்முறையாகச் சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள்
தற்காலிக அடிப்படையில் வேலை அனுமதி பெற்றவர்கள்

  • எப்போது பயிற்சித்திட்டத்துக்குச் செல்லவேண்டும்?

உற்பத்தித்துறை, பெண் கப்பல் ஊழியர்கள்: 
சிங்கப்பூருக்கு வந்து 2 வாரங்களுக்குள்

ஆண் கப்பல் ஊழியர்கள்: 
சிங்கப்பூருக்கு வந்தவுடன் 

  • எங்குச் செல்லவேண்டும்?

உற்பத்தித்துறை, பெண் கப்பல் ஊழியர்கள்:
சூன் லீயில் (Soon Lee) இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிலையம் 

ஆண் கப்பல் ஊழியர்கள்:

வெளிநாட்டு ஊழியர் வரவேற்பு நிலையங்கள் (Onboard Centre)

  • பயிற்சித் திட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயம் 

வெளிநாட்டு ஊழியர்கள் அதற்குச் சென்றபிறகே வேலை அனுமதி வழங்கப்படும்

  • பயிற்சித்திட்டத்துக்குச் செல்வதற்கான கட்டணம்? 

75 வெள்ளி - அதனை முதலாளிகள் செலுத்துவர். 

  • பயிற்சித்திட்டம் நடத்தப்படும் மொழி?

பயிற்சித் திட்டம் ஆங்கிலத்திலும் தமிழிலும் மற்ற சில மொழிகளிலும் நடத்தப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்