Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்துவதில் தமிழாசிரியர்களின் பங்கு மிக முக்கியம்'

வாசிப்புநேரம் -

கல்வியமைச்சு தாய்மொழிக் கற்றலை ஊக்குவிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தொடர்பு, தகவல் மூத்த துணையமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறியுள்ளார்.

தாய்மொழியை மாணவர்கள் ஆழமாகப் பயில்வதற்குப் பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

அதே வேளையில் சமூகமும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அதன் பங்கை ஆற்றுவதாக டாக்டர் புதுச்சேரி கூறினார்.

தமிழாசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

தமிழ் முரசு, தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழு, சிங்கப்பூர்த் தமிழாசியர் சங்கம் ஆகியவை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.

இம்முறை மொத்தம் 146 ஆசிரியர்கள் விருதுகளுக்கு முன்மொழியப்பட்டனர்.
திருமதி. புவனேஸ்வரி சுப்பரமணியம், திரு. ஜோசப் அந்தோணி ராஜ், திரு. ரா ஜெயமோஹன்,  திரு. தாண்டவமூர்த்தி வசந்தவேலன், திருமதி. சுப்பு சுபா சக்திதேவி, திருமதி இராசராசன் ஹேமலதா ஆகிய 6 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்துவதில் தமிழாசிரியர்களின் பங்கு மிக முக்கியம் என்கின்றனர் இவர்கள்.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்