Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒரு மில்லியன் வெள்ளிக்கு விலைபோன HDB மறுவிற்பனை வீடுகள் - வாங்கியோரின் வயது?

வாசிப்புநேரம் -
சென்ற 8 ஆண்டுகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளை ஒரு மில்லியன் வெள்ளிக்கு வாங்கியோரின் இடைநிலை வயது 40 என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மன்ட் லீ (Desmond Lee) தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூன் வரையிலான கழக மறுவிற்பனை வீடுகளின் பரிவர்த்தனையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான வீடுகளே ஒரு மில்லியன் வெள்ளி அல்லது அதற்கும் மேலான விலைக்கு விற்பனையாகின.

அதை வாங்கியோரில்:

- சிங்கப்பூரர்கள்: சுமார் 94 விழுக்காட்டினர்
- நிரந்தரவாசிகள்: சுமார் 6 விழுக்காட்டினர்

இத்தகைய வீடுகளை வாங்கியோரின் வயது, குடியுரிமை ஆகிய விவரங்களை மன்ற உறுப்பினர் கான் தியாம் போ கேட்டிருந்தார்.

அதற்குத் திரு லீ எழுத்துபூர்வ பதிலளித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்