ராணுவ நிபுணர்களாகப் பட்டம் பெற்ற 1035 சிங்கப்பூர் ஆயுதப்படை தேசிய சேவையாளர்கள்

படம்: MINDEF, Singapore
சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்த 1035 தேசிய சேவையாளர்கள் ராணுவ நிபுணர்களாகப் பட்டங்களைப் பெறுகின்றனர்.
பல நிச்சமற்ற சூழல்கள் எதிர்காலத்தில் நிலவினாலும் அதிகாரிகள் பெற்றிருக்கும் பயிற்சி அவர்கள் மீள்திறனுடன் இருப்பதற்கு உதவும் என்று நம்புவதாகப் போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) கூறினார்.
அணிவகுப்புச் சடங்கை மேற்பார்வையிடும் அதிகாரியாக அவர் பதிவுசெய்யப்பட்ட காணொளி மூலம் உரையாற்றினார்.
மொத்தம் 22 வாரம் நீடித்தது அதிகாரிகளின் தீவிரப் பயிற்சி.
போர்ச் சேவை, திட்டமிடல், தலைமைத்துவம் ஆகியவற்றில் அவர்களின் திறன்கள் மெருகூட்டப்பட்டன.
அவர்கள் இனி ஆயுதப்படையில் தளபத்திய, பயிற்சிப் பொறுப்புகளை வகிப்பர்.

பட்டம் பெற்றவர்களில் ஒருவரான
ஹரிஹரன் கிருஷ்ணாவிற்குக் கடற்படை முக்குளிப்புப் பிரிவில் சேர வாய்ப்புக் கிடைத்துள்ளது.
சிறுவயதிலிருந்து தண்ணீர் என்றால் அச்சம்.
ஆனால் தந்தையைப்போல் ஆகவேண்டும் என்ற விருப்பத்தால் அச்சத்தைத் தள்ளிவைத்தார்.
புதிய பிரிவில் சிறப்பாகச் செய்ய ஆசை இருப்பதாகக் கூறிய அவர் சக அதிகாரிகளுக்கு நன்றாக வழிகாட்டவேண்டும் என்ற முனைப்பு இருப்பதாகவும் சொன்னார்.
நேற்றுத் தொடங்கிய பட்டமளிப்பு விழா வரும் 17ஆம் தேதி வரை நீடிக்கும்.